வெசாக் தினத்தில் மென்பானத்தை தானமாக வழங்கிய ஜெர்மனி பிரஜைகள்

Monday, 20 May 2019 - 18:13

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
ஜெர்மனி பிரஜைகள் சிலர், தம்புள்ளை விஹார சந்தி பகுதியில் வெசாக் நிகழ்வை கொண்டாடும் முகமாக கடந்த 19 மற்றும் 20 திகதிகளில்  மென்பானத்தை தானமாக வழங்கியுள்ளனர்.

தம்புள்ளை விகாரை சந்தியில், இளைஞர்கள் சிலருடன் இணைந்து குறித்த வெளிநாட்டவர்கள் இதனை ஏற்பாடு செய்துள்ளமை விசேட அம்சமாகும்.

இந்த தானம் வழங்குவதற்கான செலவை ஜெர்மனிய பிரஜைகள் ஏற்றுக்கொண்டுள்ளதோடு, அவ்வீதியூடாக சென்ற அனைவருக்கும் மென்பானம் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்ந நிகழ்வில் பங்கேற்ற ஜெர்மனிய யுவதியொருவர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு வருமாறு அழைத்தமை குறிப்பிடத்தக்கது.