மாஓயாவில் இருந்து 1500 சிம் அட்டைகள் மீட்பு

Tuesday, 21 May 2019 - 8:15

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%93%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+1500+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
மாஓயாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் - நீர்கொழும்பு கொச்சிக்டை பகுதியில் மீட்கப்பட்ட ஆயிரத்து 500 சிம் அட்டைகள் தொடர்பில் காவல்துறை விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த சிம் அட்டைகள் பையொன்றில் இடப்பட்டிருந்ததை மாஓயாவில் மீன்பிடிக்க சென்ற இளைஞர்கள் சிலர் நேற்றைய தினம் அவதானித்துள்ளனர்.

அந்த சிம் அட்டைகள் இதுவரை பயன்படுத்தப்படாத நிலையில், எதற்காக மறைத்து வைக்கப்பட்டது தொடர்பில் இதுவரை அறியப்படவில்லை.

எனினும் குறித்த சிம் அட்டைகளுக்கு சொந்தமான தொலைபேசி நிறுவனத்திடம் இது தொடர்பில் அறிக்கை கோருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.