Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+31+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%89%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%21
Tuesday, 21 May 2019 - 15:08
தற்கொலை குண்டுத்தாக்குதலில் 31 பேரை கொலை செய்த உமர் ஹப்தாபுக்கு ஆயுள் தண்டனை!
6,681

Views
மேஜர் ஜெனரால் ஜானக பெரேரா உள்ளிட்ட 31 பேரை தற்கொலை குண்டுத்தாக்குதலில் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான உமர் ஹப்தாப் என்ற நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் மற்றும் கம்பஹா சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரேமா சுவர்ணாதிபதி ஆகியோரால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தாக்கல் செய்யப்பட்டிருந்த 48 குற்றப்பத்திரிக்கையில் 31 இல் சந்தேகநபர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி , முதல் மூன்று குற்றச்சாட்டுக்கு பிரதிவாதிக்கு 20 வருடங்கள் வீதம் 60 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்த நீதியரசர் குறித்த தண்டனை காலத்தை வேறு வேறாக கழிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதற்கு மேலதிகமாக , நான்காவது குற்றச்சாட்டு முதல் 31வது குற்றச்சாட்டு வரை பிரதிவாதியை குற்றவாளியாக அறிவித்த நீதியரசர் குறித்த அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் பிரதிவாதிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அதேபோல் , பிரதிவாதிக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் அரசுடமையாக்க இதன்போது உத்தரவிடப்பட்டது.

ஜனக பெரேரா உள்ளிட்ட 31 பேரை கொலை செய்ய சம்பவம் தொடர்பில் மதவாச்சி - மஹாசியம்பலாகஸ்கட பகுதியை சேர்ந்த இந்த நபர் 5 வருடங்களுக்கும் அதிகமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இதற்கு முன்னர் , இந்த சம்பவத்திற்கு உதவி புரிந்த விடுதலை புலிகள் உறுப்பினர்களின் முன்னாள் ஆயுதமேந்திய தலைவரொருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை வடமத்திய மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்தது.

2008ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ம் திகதி அனுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த தற்கொலை குண்டுத்தாக்குதலில் மேஜர் ஜெனரால் ஜானக பெரேரா உள்ளிட்ட 31 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,634 Views
HiruNews
HiruNews
HiruNews
56,158 Views
HiruNews
HiruNews
HiruNews
21,518 Views
HiruNews
HiruNews
HiruNews
46,823 Views
HiruNews
HiruNews
HiruNews
1,231 Views
HiruNews
HiruNews
HiruNews
105,882 Views
Top