Hirunews Logo
%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%21
Tuesday, 21 May 2019 - 19:57
ஊக்க மருந்து சர்ச்சை தொடர்பில் கோமதி மாரிமுத்து விளக்கம்!
123

Views
ஊக்கமருந்து பாவனை சோதனை அறிக்கையின் விபரங்கள் தமக்கு கிடைக்கப்பெறவில்லை என்று தமிழகத்தின் மெய்வல்லுனரான கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

கட்டாரில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில், 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் வெற்றிப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்ற கோமதி, புகழ்பெற்றவராக விளங்குகிறார்.

எனினும் அவர் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தினை பாவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர் ஊக்கமருந்து பாவித்தமை உறுதியாகி இருப்பதாக டெக்கான் ஹெரால்ட் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

இதன் காரணமாக இத்தாலி செல்லும் இந்திய மெய்வல்லுனர் அணியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த செய்திகளை மறுத்துள்ள கோமதி மாரிமுத்து, ஊக்கமருந்து சோதனை குறித்த விபரங்களோ, இந்திய மெய்வல்லுனர் குழுவில் இருந்து நீக்கப்பட்டமையோ தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

இது குறித்து இந்திய மெய்வல்லுனர் சம்மேளத்திடம் விளக்கம் கோரி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த கோமதி, ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றதன் பின்னர் பிரபலமானார்.

அவருக்கு தமிழக அரசாங்கமும், எதிர்கட்சியும் உதவிகளை வழங்கியதுடன், தமிழ் சினிமா கலைஞர்களும் உதவிகளை வழங்கினர்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,991 Views
HiruNews
HiruNews
HiruNews
56,447 Views
HiruNews
HiruNews
HiruNews
21,626 Views
HiruNews
HiruNews
HiruNews
46,954 Views
HiruNews
HiruNews
HiruNews
1,297 Views
HiruNews
HiruNews
HiruNews
106,172 Views
Top