அவசர கால சட்டம் மேலும் ஒரு மாதம் நீடிப்பு

Wednesday, 22 May 2019 - 15:02

%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
அவசரகால சட்டம் மேலும் ஒருமாத காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாம் சரத்தில் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது பாகத்தின் விதிமுறைகள் நாடு பூராகவும் செயற்படுத்தப்பட வேண்டும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் அவசரகால நிலைமை நிலவுவதன் காரணமாக, பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை பாதுகாத்தல், மக்களின் வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகள் என்பனவற்றைப் பேணுவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.