பிரதமரின் அதிரடி உத்தரவு!

Wednesday, 22 May 2019 - 19:36

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%21
நாடுமுழுவதும் உள்ள அனைத்து வீதிகளின் பெயர் பலகைகளும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் மாத்திரமே காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான பணிப்புரை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு பிரதமரால் வழங்கப்பட்டுள்ளதாக, பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் தவிர்ந்த வேறு எந்த மொழியிலும் வீதிகளின் பெயர்களை குறிப்பிடும் பெயர் பலகைகள் அமைக்கப்படக்கூடாது என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, மத, மொழி ரீதியில் அல்லாமல், பொது பாடசாலை முறைமையை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிங்களம், தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவம் என்ற அடிப்படையில் பாடசாலைகளை முன்னெடுப்பதா? அல்லது பொது பாடசாலை முறையை ஒன்றை ஏற்படுத்துவதா? என்பது தொடர்பான கேள்வி உள்ளது.

இந்த நிலையில், ஞாயிறு அறநெறி வகுப்புகளைத் தவிர்ந்த ஏனைய அனைத்து மத ரீதீயான பாடசாலைகளையும், கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், மத்ரசா கல்வியை கல்வி அமைச்சின் கீழ் சபை ஒன்றின் ஊடாக முன்னெடுக்க முஸ்லிம் பிரதிநிதிகள் இணங்கியுள்ளனர் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.