Hirunews Logo
%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Wednesday, 12 June 2019 - 10:52
பொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
5,688

Views
நாட்டின் வட பகுதியில் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் மேலும் தொடரும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி , மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த நிலையம் இன்று காலை வௌியிட்ட செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், பதுளை, அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.

வடக்கு, வடமத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான அதிகரித்த வேகத்தில் பலத்த காற்று வீசும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,245 Views
HiruNews
HiruNews
HiruNews
38,194 Views
HiruNews
HiruNews
HiruNews
15,963 Views
HiruNews
HiruNews
HiruNews
38,063 Views
HiruNews
HiruNews
HiruNews
247 Views
HiruNews
HiruNews
HiruNews
87,928 Views
Top