Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Wednesday, 12 June 2019 - 13:30
இலங்கைக்கு பொருளாதார ரீதியில் பாரிய நட்டத்தை ஏற்படுத்தும் என தெரிவிப்பு
998

Views
புதிய வகை சிகரட் இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதாக எடுக்கப்பட்ட தீர்மானம் இலங்கைக்கு பொருளாதார ரீதியில் பாரிய நட்டத்தை ஏற்படுத்தும் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

சிகரட் சுகாதார ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் நாட்டிற்கு மிகவும் பாதகமானதொன்றாகும்.

சுகாதார தரவுகளுக்கு அமைய நாட்டில் நிகழும் மரணங்களில் பத்தில் ஒன்று புகைத்தலினால் ஏற்படுகின்றது.

இது வருடமொன்றிற்கு 20ஆயிரத்திற்கும் அதிகமானோர் மரணிக்கக் காரணமாக அமைகின்றது.

புகைத்தலினால் மரணித்தவர்களுகளினதும், நோய்வாய்ப்பட்டவர்களினதும் சுகாதார செலவிற்காக 2015ம் ஆண்டில் மாத்திரம் இலங்கை அரசாங்கம் 90 இலட்சம் ரூபாவை செலவிட்டிருந்தது.

இலங்கையில் சிகரட் புகைப்பவர்கள் நாளொன்றிற்கு ரூபா 40 கோடி செலவிடுகின்றனர்.

அவர்களில் பெருமளவிலானோர் குறைந்த வருமானம் பெறுபவர்களென ஆய்வுகளின் மூலம் தெரியவருகின்றது.

இவ்வாறான நிலையில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர சீன புகையிலைக் கம்பனி ஒன்று இலங்கையில் நிறுவப்படவுள்ளதாகவும் அதன் ஊடாக அரசாங்கத்திற்கு மேலதிக இலாபம் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் நிதி அமைச்சு தூரநோக்கின்றி எடுத்துள்ள இந்த தீர்மானத்தினால், இலங்கை பொருளாதார, சுகாதார ரீதியான பாரிய பிரச்சனைகளுக்கும் முகம் கொடுக்கும் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,312 Views
HiruNews
HiruNews
HiruNews
55,887 Views
HiruNews
HiruNews
HiruNews
21,456 Views
HiruNews
HiruNews
HiruNews
46,692 Views
HiruNews
HiruNews
HiruNews
1,194 Views
HiruNews
HiruNews
HiruNews
105,605 Views
Top