Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
Thursday, 13 June 2019 - 13:05
பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய மற்றும் ஒருவர் கைது
723

Views
இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குலின் சூத்திரதாரி என்று கருதப்படும் மொஹமட் அசாருதீன் என்ற நபர், கோயமுத்தூரில் நேற்று கைது செய்யப்பட்டார்.

அவருடன் மேலும் ஆறு பேர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், நேற்று காலை முதல் கோயமுத்தூரில் பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.

இதன்போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, இந்தியாவில் சமுகரீதியான அமைதியின்மையை தூண்டியதாக குற்றம் சுமத்தி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய போதகர் ஷாகிர் நாயக்கை, இந்தியாவிற்கு நாடுகடத்துமாறு, மலேசியாவிடம் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் கைதான ஐ.எஸ். பயங்கரவாத ஆதரவுக் குழுவின் தலைவர் மற்றும் டாக்காவில் 2016ம் ஆண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதக் குழுவினர் போன்றவர்கள், ஷாகிர் நாயக்கத்தின் போதனைகளை பின்பற்றியவர்கள் என்று இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர் மீது குற்றப்பதிவு செய்யப்பட்டதன் பின்னர், 2016ம் ஆண்டு அவர் இந்தியாவில் இருந்து வெளியேறி, மலேசியாவில் ஏதிலி அந்தஸ்த்து பெற்றார்.

அவரை நாடுகடத்தப் போவதில்லை என்று, மலேசிய பிரதமர் மஹாதீர் மொஹமட் அறிவித்திருந்தார்.

எனினும் மீண்டும் அவரை நாடுகடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,245 Views
HiruNews
HiruNews
HiruNews
38,194 Views
HiruNews
HiruNews
HiruNews
15,963 Views
HiruNews
HiruNews
HiruNews
38,063 Views
HiruNews
HiruNews
HiruNews
247 Views
HiruNews
HiruNews
HiruNews
87,928 Views
Top