Hirunews Logo
%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81
Thursday, 13 June 2019 - 15:24
அரச பேருந்து பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு
1,732

Views
தேசிய சேவை சங்கத்துடன் இணைந்த இலங்கை போக்குவரத்து சபை பணியாளர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் மற்றும் பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க பிரதிநிதிகளுடன் பிரதமர் காரியாலயத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்குள் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவதாக வழங்கிய இணக்கப்பாட்டுக்கு அமைய பணிப்புறக்கணிப்பை நிறைவு செய்ய தீர்மானித்ததாக தேசிய சேவை சங்கத்தின் உப செயலாளர் சுனில் டி சில்வா, கலந்துரையாடலுக்கு பின்னர் எமது செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளார்.

தற்போது வழங்கப்பட்டுள்ள பதவி உயர்வுகளுக்கு அமைய வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தேசிய சேவை சங்கத்தின் இலங்கை போக்குவரத்து சேவை பணியாளர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்திருந்தனர்.

பணிப்புறக்கணிப்பிற்கு முன்னர் அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகம்  சிறிகொத்தவில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,991 Views
HiruNews
HiruNews
HiruNews
56,447 Views
HiruNews
HiruNews
HiruNews
21,626 Views
HiruNews
HiruNews
HiruNews
46,954 Views
HiruNews
HiruNews
HiruNews
1,297 Views
HiruNews
HiruNews
HiruNews
106,172 Views
Top