இங்கிலாந்து அணியுடன் இன்று மோதவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி

Friday, 14 June 2019 - 8:39

%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF
உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் 19வது லீக் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

மேற்கிந்திய தீவுகளும் இங்கிலாந்தும் இன்றைய போட்டியில் மோதுகின்றன.

நேற்று இடம்பெறவிருந்த இந்திய – நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தது.

இந்த தொடரில் மழையால் பாதிக்கப்பட்ட நான்காவது போட்டி இதுவாகும்.

இதன் காரணமாக இந்தியாவிற்கும் நியுசிலாந்துக்கும் தலா ஒவ்வொரு புள்ளி வீதம் வழங்கப்பட்டது.

தொடரின் புள்ளிகள் பட்டியலில் நியுசிலாந்து அணி 7 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.

அவுஸ்திரேலியா 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இந்தியா 5 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளன.

இங்கிலாந்து 4 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தில் இருக்கிறது.

இலங்கை அணியும் 4 புள்ளிகளையே பெற்றுள்ள போதும், ஓட்ட விகிதாசார புள்ளிகள் குறைவால் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஸ், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.