தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள நேரிடும்

Monday, 17 June 2019 - 7:44

%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
நிதியமைச்சர் மங்கள சமரவீர சீனாவிலிருந்தோ அல்லது வேறு எந்த நாட்டிலிருந்தோ சிகரட்டுக்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான சட்டங்களை தயாரித்தால் தாம் அதற்கு எதிராக தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள நேரிடும் என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அவ்வாறான அரசாங்கம் ஒன்றில் தாம் அமைச்சு பதவி வகிப்பது கூட ஏற்புடையதல்லவென அவர் எமது செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் மங்கள சமரவீர, வெளிநாட்டு சிகரட்டுக்களை இறக்குமதி செய்ய நிதியமைச்சு அனுமதியளித்துள்ளதாக குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, தான் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் வரை அவ்வாறான எந்தவித யோசனைக்கும் இடம் வழங்க போவதில்லை என குறிப்பிட்டார்.

அவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கினால் அந்த அமைச்சரவையில் தான் அங்கம் வகிக்க போவதில்லை என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.