மொஹமட் காதர் மொஹமட் சஷ்மி தற்கொலைதாரியின் நெருங்கியவர்...

Monday, 17 June 2019 - 13:13

%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D...
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் மொஹமட் காதர் மொஹமட் சஷ்மி முஸ்லிம் நாட்டிற்காக தனது வாழ்வினை அர்ப்பணிப்பதாக சத்தியம் செய்துள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.

தேசிய தௌஹீத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹசீம் முன்னிலையில் அவர் தற்கொலை செய்துக்கொள்வதாக சத்தியம் செய்துள்ளார் என விசாரணைகளின் வாயிலாக கண்டறியப்பட்டுள்ளது.

தெஹிவளையில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வரும் குறித்த நபர், தெஹிவளையில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய தற்கொலைதாரியின் நெருங்கியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள குறித்த நபர் உள்ளிட்ட சிலருக்கு, சஹ்ரான் மாத்தளை பகுதியில் வைத்து ஆயுத பயிற்சி வழங்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரான சஷ்மியிடமிருந்து மீட்கப்பட்டுள்ள கையடக்க தொலைபேசி இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பிலான அறிக்கையும் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபர் காலி மிலித்துவ பகுதியை சேர்ந்தவர் என்பதோடு, திருமணத்திற்கு பின்னர் அவர் தெஹிவளை பகுதியில் வந்து பதிவு செய்து வாழந்து வந்துள்ளார்.