Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D+-+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...%21%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
Wednesday, 26 June 2019 - 12:39
மரண தண்டனை நிச்சயம் - கையொப்பம் இட்டுவிட்டேன் - ஜனாதிபதி அதிரடியாக அறிவிப்பு...!(காணொளி)
7,509

Views
தடைவிதிக்கப்பட்டுள்ள போதைப் பொருள் கடத்தல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு வெகு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் வைத்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டார். 

போதைபொருள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள நால்வருக்கு மரண தண்டனை வழங்குவதற்காக, தான் கையொப்பம் இட்டுள்ளதாகவும் அதற்கான திகதியையும் தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.அதேநேரம், ஏப்ரல்21 தாக்குதல் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வரும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் முன்னிலையாகுமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

ஆனால் அவ்வாறான அழைப்பு கிடைத்தாலும் தாம் அதில் முன்னிலையாகப்போவதில்லை.

இந்த தெரிவுக்குழு அலரிமாளிகையால் நடத்தப்படும் அரசியல் நாடகம் மட்டுமே எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்காவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ளதாக கூறப்படும் சோஃபா மற்றும் எக்சா ஆகிய உடன்படிக்கைகளை தாம் எதிர்ப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, இதுதொடர்பாக தாம் அமைச்சரவையிலும் தமது ஆட்சேபனையைத் தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டில் ஸ்திரத்தன்மை இல்லை என்பதை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி, அதற்கு 19ம் திருத்தச் சட்டமே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்ததாக யார் ஆட்சிக்கு வந்தாலும், அவர் நாட்டை நேசிப்பவராக இருந்தால் 19ம் திருத்தச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதனை நீக்கினால் மட்டுமே நாட்டுக்கு 2020ம் ஆண்டு சுபீட்சம் தருவதாக இருக்கும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் சிறிலங்கா சுதந்திர கட்சி மேற்கொள்ளும் தீர்மானத்தில் அடிப்படையிலேயே தாம் செயற்படவிருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகப்பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் வைத்து இதனைக் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,077 Views
HiruNews
HiruNews
HiruNews
55,704 Views
HiruNews
HiruNews
HiruNews
21,427 Views
HiruNews
HiruNews
HiruNews
46,575 Views
HiruNews
HiruNews
HiruNews
1,160 Views
HiruNews
HiruNews
HiruNews
105,445 Views
Top