Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+300+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B+%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81
Thursday, 11 July 2019 - 12:50
வன்னியின் அபிவிருத்திக்கு 300 மில்லியன் அமைச்சர் மனோ ஒதுக்கீடு
136

Views
வன்னி பிரதேசத்தின் அபிவிருத்தி போதுமானதாக இல்லை என்பதை உணர்ந்து கொண்ட அமைச்சர் மனோகணேசன் 300 மில்லியன் ரூபாவை ஒதக்கீடு செய்துள்ளதாக அமைச்சரின் வன்னிப்பிராந்தியத்திற்கான இணைப்பாளர் ச.விமலச்சந்திரன் தெரிவித்தார்.

இன்று வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசனின் நிதி ஒதுக்கீட்டில் வன்னி பிராந்தியத்திற்கு சுமார் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீடானது அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மையப்படுத்தியதாக அமைந்திருக்கின்றது.

இந்த வேலைத்திட்டங்கள் அவருடய அமைச்சின் இணைப்பாளர்களின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த நிதியின் ஊடாக பாடசாலைகள் வீதி அபிவிருத்தி, கிராமிய அபிருத்தி, உட்கட்டமைப்பு அபிவிருத்தி என பல வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் வவுனியா மாவட்டத்திற்கு 100 மில்லியன் ரூபா முதற்கட்டடமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் வவுனியா மாவட்டத்தில் முதற்கட்டமாக நாளை 11மில்லியன் ரூபாவிற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த வேலைத்திட்டங்களிற்கான நிதி ஒதுக்கீடு வவுனியாவில் உள்ள பிரதேச செயலகங்கள் ஊடக வழங்கப்பட்டு உள்ளதுடன் இந்த நிதி கிடைக்கப்பெற வேண்டியவர்களிற்கும் இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் மனோகணேசன் வன்னி பிராந்தியத்திற்கான அபிவிருத்தி போதாமல் இருப்பதை கருத்தில் கொண்டே இந்த செயற்திட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

தேவை ஏற்படின் மேலதிகமான நிதி ஒதுக்கீட்டை செய்வதற்கும் அமைச்சர் கருசனை கொண்டுள்ளார்.

இதேவேளை வாழ்வாதார உதவிகள் மேலும் ஒரு நிதி ஒதுக்கீட்டின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வேலைத்திட்டங்களானது வன்னி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டினை அதிகரிக்க முடியும் என்ற அமைச்சரின் எண்ணக்கருவின் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றன என அமைச்சரின் வன்னிப்பிராந்தியத்திற்கான இணைப்பாளர் ச.விமலச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
10 Views
HiruNews
HiruNews
HiruNews
43,819 Views
HiruNews
HiruNews
HiruNews
17,715 Views
HiruNews
HiruNews
HiruNews
40,618 Views
HiruNews
HiruNews
HiruNews
993 Views
HiruNews
HiruNews
HiruNews
93,582 Views
Top