Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81
Thursday, 11 July 2019 - 12:52
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையிலான புதிய கூட்டணி உருவானது
121

Views
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையிலான புதிய கூட்டணி ஒன்று இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்தானது.

இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுசெயலாளர் அனுஷா சிவாராஜ், ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுசெயலாளர் இ.கதிர் மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பொதுசெயலாளர் நடேசன் நித்தியாநந்தா ஆகியோருக்கு இடையில் கைச்சாத்தானதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் இந்த ஒப்பந்தம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கும், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபாகணேசனுக்கும் இடையில் பரிமாற்றிக் கொள்ளப்பட்டது.

கொட்டகலையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் முத்துசிவலிங்கம், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜதுரை, மத்திமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான கனபதி கனராஜ், சக்திவேல், எஸ்.பிலிப், மத்திய மாகாண முன்னாள் அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோருடன், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகணேசன், வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் இந்த கூட்டணியில் இணைவார் என்று குறிப்பிட்டார்.

எனினும் இதுதொடர்பாக எமது செய்தி சேவை வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவ்வாறான கூட்டணிஒன்றில் தாம் பங்கேற்கவில்லை என்று அறிவித்தார்.

அதேநேரம் ஆறுமுகன் தொண்டமான தம்மை யாழ்ப்பாணத்தில் வைத்து சந்தித்தது நட்பு ரீதியானது என்றும், அதன்போது அரசியல்விடயங்கள் கலந்துரையாடப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
விலை உயர்ந்த மிதி வண்டிகள்..
Wednesday, 13 November 2019 - 9:23
உலகின் அழகிய மற்றும் விலை உயர்ந்த 10 மிதி வண்டிகளின் புகைப்படங்கள்          Read More
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,546 Views
HiruNews
HiruNews
HiruNews
60,655 Views
HiruNews
HiruNews
HiruNews
22,925 Views
HiruNews
HiruNews
HiruNews
48,796 Views
HiruNews
HiruNews
HiruNews
468 Views
HiruNews
HiruNews
HiruNews
110,407 Views
Top