Hirunews Logo
%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
Thursday, 11 July 2019 - 13:06
அரசாங்கத்துக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை ஆதரிக்கவுள்ள சிறிலங்கா சுதந்திர கட்சி
1,055

Views
ஜேவிபி முன்வைத்துள்ள அரசாங்கத்துக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை ஆதரிக்க சிறிலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.

கொழும்பில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த பிரேரணைக்கு ஆதரவளிப்பதா? இல்லையா என்பது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னும் தீர்மானிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக கூட்டமைப்பு கடந்த 3 நாட்களாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது.

அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது.

ஜேவிபியினால் இந்த அவநம்பிக்கை பிரேரணை முன்வைக்கப்பட்ட நிலையில், இன்று அது மீதான விவாதம் தொடர்ச்சியாக இடம்பெறுகிறது.

இந்த அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதத் தொடர்ச்சி இன்றும் நடைபெற்று மாலை 6.30க்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

தற்போது ஐக்கிய தேசிய கட்சி 106 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒரு ஆசனமும் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்துள்ளது.

இதன்படி ஆளும் தரப்புக்கு மொத்தமாக 107 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் 95 உறுப்பினர்கள் உள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 ஆசனங்களைக் கொண்டிருப்பதுடன், அவற்றில் இரண்டு பேர் கூட்டமைப்பில் இருந்து தனித்து செயற்படுகின்றனர்.

ஜேவிபி ஆறு உறுப்பினர்களைக் கொண்டுள்ளதுடன், ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஒரு ஆசனத்தைக் கொண்டுள்ளது.

இதன்படி எதிர்கட்சிக்கு 118 ஆசனங்கள் உள்ளன.

கடந்த ஒக்டோபர் புரட்சியின் பின்னர் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையை நிரூபிக்கும் பிரேரணைக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளித்திருந்தது.

இதன் மூலமே ஆளும் கட்சி தங்களது பெரும்பான்மையை காண்பித்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
10 Views
HiruNews
HiruNews
HiruNews
43,819 Views
HiruNews
HiruNews
HiruNews
17,715 Views
HiruNews
HiruNews
HiruNews
40,618 Views
HiruNews
HiruNews
HiruNews
993 Views
HiruNews
HiruNews
HiruNews
93,582 Views
Top