Hirunews Logo
+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81...
Friday, 12 July 2019 - 7:27
பிற்போடப்பட்டுள்ள தெரிவுக்குழுவின் அமர்வு...
568

Views
இன்றைய தினம் கூடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த தினத்தில் முற்பகல் 10.30க்கு தெரிவுக்குழுவின் அமர்வு ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது, அரச புலனாய்வு சேவை பிரதானி, சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் நிலந்த ஜயவர்தன, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் ரவி செனவிரட்ன மற்றும் அதன் பணிப்பாளரான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர ஆகியோர் சாட்சியமளிக்க உள்ளனர்.

அதேநேரம், காவல்துறை பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் வருண ஜயசுந்தர மற்றும் அதன் காவல்துறை பரிசோதகரான தரங்க பத்திரண ஆகியோரும் எதிர்வரும் 24 ஆம் திகதி சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் வாரமளவில் வெளியிட எதிர்பார்ப்பதாக தெரிவுக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
2,077 Views
HiruNews
HiruNews
HiruNews
55,704 Views
HiruNews
HiruNews
HiruNews
21,427 Views
HiruNews
HiruNews
HiruNews
46,575 Views
HiruNews
HiruNews
HiruNews
1,160 Views
HiruNews
HiruNews
HiruNews
105,445 Views
Top