Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88...
Friday, 12 July 2019 - 8:26
முழு அதிகாரத்துடன் கணக்காளரை நியமிப்பதற்கு நடவடிக்கை...
983

Views
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை பூரண பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதற்கான முதற்கட்டமாக முழு அதிகாரத்துடன் கணக்காளரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு அமையவே, அவநம்பிக்கை பிரேரணை விடயத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
 
அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பியினால் கொண்டுவரப்பட்ட அவநம்பிக்கை பிரேரணை நேற்றைய தினம் 27 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது.
 
அவநம்பிக்கை பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில், எதிராக 119 வாக்குகள் வழங்கப்பட்டன.
 
ஜே.வி.பி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஒன்றிணைந்த எதிரணி என்பன பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன.
 
இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்க தரப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.
 
இந்த நிலையில், அரசாங்கத்திற்கு ஆதரவளித்தமை தொடர்பில் எமது செய்திச் சேவை வினவியபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறித்த விடயத்தை தெரிவித்தார்.
 
இதேவேளை, கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில், கல்முனை பட்டிணத்தில் எல்லை நிர்ணயம் தொடர்பில் முஸ்லிம் தரப்பினருடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
267 Views
HiruNews
HiruNews
HiruNews
42,744 Views
HiruNews
HiruNews
HiruNews
17,340 Views
HiruNews
HiruNews
HiruNews
40,144 Views
HiruNews
HiruNews
HiruNews
599 Views
HiruNews
HiruNews
HiruNews
92,525 Views
Top