உலக கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி மன்னிப்பு கோரியது நியுசிலாந்திடம்....!

Monday, 15 July 2019 - 10:06

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D....%21

தனது கிரிக்கட் வாழ் நாள் முழுவதிலும் நியுசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சண் இடம் மன்னிப்பு கோருவதாக இங்கிலாந்து அணியின் சகல துறை ஆட்டக்காரர் பென் ஸ்டொக் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியில் போட்டியின் இடைநடுவில் பென்ஸ்டொக் அடித்த பந்து எல்லையை தொடுவதற்கு சிறிது தூரம் காணப்படுகையில் நியுசிலாந்து அணியின் வீரர் அதனை தடுத்து விக்கட் காப்பாளர் நோக்கி வீசுகிறார்.

அதற்கிடையில் தனது முதலாவது ஓட்டத்தை நிறைவு செய்த பென் ஸ்டொன் இரண்டாவது ஓட்டத்திற்காக ஓடிக்கொண்டிருந்த வேளையில் அவரின் உடலில் மோதுண்ட பந்து மீண்டும் எல்லைக் கோட்டினை நோக்கி சென்று ஒரு பந்துக்கு 6 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தது.

அதாவது பென் ஸ்டொக் இரண்டு ஓட்டங்களையும் உதிரிகளாக நான்கு ஓட்டங்களும் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எல்லைக்கோட்டிலிருந்து விக்கட் நோக்கி வீசப்பட்ட பந்தினை தாம் திட்டமிட்டு தனது உடலில் எதிர்கொள்ளவில்லை எனவும் தன்னிச்சையாக நடைபெற்றது எனவும் விளக்கமளித்து இங்கிலாந்து அணியின் சகல துறை ஆட்டக்காரர் பென் ஸ்டொன் நியுசிலாந்து அணியின் தலைவர் கென் வில்லியம்சனிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

 



 2019 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது.


உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி லண்டன் லோர்ட்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. 

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பொடுத்தாட தீர்மானித்து இங்கிலாந்து அணியை களத்தடுப்பில் ஈடுபடுமாறு பணித்தது. 

இதற்கமைய முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு 242 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 241 ஓட்டங்களைப் பெற்றதில் போட்டி சமநிலை அடைந்தது. 

இந்நிலையில்; சுப்பர் ஓவர் அடிப்படையில் வெற்றியாளர்களை தெரிவு செய்ய தீர்மானிக்கப்பட்டதற்கு இணங்க முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி சுப்பர் ஓவரில் 15 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணியும் 15 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதில் சூப்பர் ஓவரும் சமநிலையில் முடிந்தது. 

இரு அணிகளும் பெற்றுக்கொண்ட 4 மற்றும் 6 ஓட்டங்களின் (பவுண்டரிகளின்) அடிப்படையில் இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி பெற்றதோடு உலகக் கிண்ணத்தை முதன்முறையாக தன்வசமாக்கிக்கொண்டது.