Hirunews Logo
%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
Monday, 15 July 2019 - 19:08
நியூசிலாந்து தோல்வி குறித்து நகைச்சுவையாக கருத்து வெளியிட்டுள்ள நியூசிலாந்து பிரதமர்
15,482

Views
லண்டன் ஒவலில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து-நியூசிலாந்து இறுதி உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைந்தமை குறித்து நியூசிலாந்து பிரதமர் ஜசிண்டா ஆடேர்ன் நகைச்சுவையாக கருத்தினை வெளியிட்டுள்ளார்.

நியூசிலாந்து அணியின் பரபரப்பான இறுதி வேளையில் அவர்கள் செயல்பட்டமை பாராட்டப்பட வேண்டிய விடயம் என அவர் நியூசிலாந்து வானொலிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பலர் நியூசிலாந்து அணி, தமது கறுப்பு வர்ண தொப்பியை இழந்துள்ளதாக தெரிவித்திருந்தனர்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர், எமது அணியினர் கறுப்பு வர்ண தொப்பியை இழந்துள்ள போதிலும், எமது இதயங்களை கவர்ந்துள்ளதுடன் நம்பமுடியாக அளவிற்கு உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நேற்று நிறைவடைந்த உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் முதன் முறையாக வெற்றி கிண்ணத்தை இங்கிலாந்து சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஐந்து ஓட்டங்கள் வழங்கப்பட வேண்டிய இடத்தில், ஆறு ஓட்டங்கள் வழங்கப்பட்டமை நடுவர்களின் தவறு என்று, முன்னாள் நடுவர் சைமன் டௌஃபல் தெரிவித்துள்ளார்.

களத்தடுப்பாளரால் வீசப்பட்ட பந்து பென்ஸ்டோக்ஸின் மட்டையில் பட்டு, எல்லைக்கோட்டை தாண்டியதை அடுத்து ஆறு ஓட்டங்கள் வழங்கப்பட்டன.

ஆனால் விதிகளின் படி ஐந்து ஓட்டங்களே வழங்கப்பட வேண்டும் என்றும், இது நடுவர்களின் பிழை என்றும் சைமன் டௌஃபல் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
விலை உயர்ந்த மிதி வண்டிகள்..
Wednesday, 13 November 2019 - 9:23
உலகின் அழகிய மற்றும் விலை உயர்ந்த 10 மிதி வண்டிகளின் புகைப்படங்கள்          Read More
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,546 Views
HiruNews
HiruNews
HiruNews
60,655 Views
HiruNews
HiruNews
HiruNews
22,925 Views
HiruNews
HiruNews
HiruNews
48,796 Views
HiruNews
HiruNews
HiruNews
468 Views
HiruNews
HiruNews
HiruNews
110,407 Views
Top