Hirunews Logo
%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88
Friday, 19 July 2019 - 16:47
கழிவுப் பொருட்களை இறக்குமதி செய்த நாட்டுக்கே திருப்பி அனுப்புமாறு பணிப்புரை
1,720

Views
கட்டுநாயக்க ஏற்றுமதி செயலாக்க வலயத்தில் குவிக்கப்பட்டுள்ள கழிவுப் பொருட்களை எவ்வித தாமதமுமின்றி இறக்குமதி செய்த நாட்டுக்கே மீள் ஏற்றுமதி செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

ஹேலியஸ் ப்றீ ஷோன் என்ற தனியார் நிறுவனத்திற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பொருட்களை இறக்குமதி செய்த நாட்டுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் தமது செலவீனத்தில் மீள் ஏற்றுமதி செய்ய வேண்டும் என தேசிய சுற்றுச்சூழல் சட்டத்திற்கு அமைய, மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் விடுக்கப்பட்ட பணிப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கழிவுப் பொருட்களை இயன்றளவு விரைவாக மீள ஏற்றுமதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு இலங்கை முதலீட்டு சபையும் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

கட்டுநாயக்க ஏற்றுமதி செயலாக்க வலயத்தின் 4 ஆம் இலக்கப் பகுதியில் ஹேலியஸ் ப்றீ ஷோன் நிறுவனம், கழிவுப் பொருட்கள் அடங்கிய 40 அடி நீளமுடைய 130 கொள்கலன்களை 12 சந்தர்ப்பங்களில் இறக்குமதி செய்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அவற்றை இறக்குமதி செய்த நாட்டுக்கே மீள் ஏற்றுமதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
937 Views
HiruNews
HiruNews
HiruNews
48,217 Views
HiruNews
HiruNews
HiruNews
18,841 Views
HiruNews
HiruNews
HiruNews
42,938 Views
HiruNews
HiruNews
HiruNews
119 Views
HiruNews
HiruNews
HiruNews
97,537 Views
Top