Hirunews Logo
%E0%AE%B5%E0%AF%86%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Sunday, 21 July 2019 - 20:47
வெகு விரைவில் வேலை வாய்ப்பு
869

Views
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கும்  கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கும்  இடையில் சந்திப்பொன்று இன்றைய தினம் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பானது யாழ்ப்பாண மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 600க்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் கல்வி இராஜாங்க அமைச்சரை சந்தித்து தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில்  தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த கல்வி ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் காலத்தில் வெகு விரைவாக வடமாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பினை பெற்று தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பபடவுள்ளது.

அதற்கு தான் உரிய அழுத்தத்தைக் கொடுக்கவுள்ளதாகவும் தமிழ் மக்கள் வாக்களித்து அனுப்பிய தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களுக்கு எதையும் செய்யவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் நாம் சிறந்த ஒரு ஜனாதிபதியை தெரிவு செய்வதன் மூலம் வடபகுதியினை  அபிவிருத்தி செய்வதோடு இளைஞர் யுவதிகளுக்கான வேலை  வாய்ப்புகளையும்  பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்திருந்தார். 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
825 Views
HiruNews
HiruNews
HiruNews
47,189 Views
HiruNews
HiruNews
HiruNews
18,522 Views
HiruNews
HiruNews
HiruNews
42,305 Views
HiruNews
HiruNews
HiruNews
185 Views
HiruNews
HiruNews
HiruNews
96,638 Views
Top