நியாயமான தீர்வை பெற்றுக் கொடுக்கவுள்ள மனோ கணேஷன்

Tuesday, 23 July 2019 - 19:18

+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினைக்கு நியாயமான தீர்வை பெற்றுக் கொடுக்கவுள்ளதாக அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் கடந்த இரண்டு வார காலமாக உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதியான கனகசபை தேவதாசனை அமைச்சர் மனோ கணேசன் தவைலமையிலான குழுவொன்று இன்று சந்தித்தது.

இதன்போது, உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட கனகசபை தேவதாசனுக்கு நீராகாரம் வழங்கிய அவரது உணவு தவிர்பை நிறைவுறுத்தியதாக அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்தார்.

இதன்பின்னர், ஊடகங்கள் மத்தியில் அமைச்சர் மனோ கணேஸன் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பாண்டிருப்பு ஸ்ரீ அரசடி அம்மன் ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்ட கவனஈர்ப்பு போராட்டம் இன்று தற்காலிகமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

தன்னை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பில் ஈடுபட்டிருந்த கனகசபை தேவதாசனை இன்று நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் மனோகணேசன், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வாக்குறுதி ஒன்றை வழங்கியிருந்தார்.

இதனையடுத்து அவருக்கு ஆதரவாக பாண்டிருப்பில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டமும் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.