ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன முன்னணி 6.5 மில்லியன் வாக்குகளை பெறுவது உறுதி

Saturday, 17 August 2019 - 13:19

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF+6.5+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி 65 இலட்ச வாக்குகளை பெற்றுக்கொள்ளும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கதிர்மாக பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி மக்கள் இரண்டு பிரிவினராக பிரிக்கப்படுதல் வேண்டும்.

அதில் நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்வதற்கு ஆதரவளிக்கும் ஒரு தரப்பினராகவும் நாட்டை அழிவுப்பாதையில் இருந்து பாதுகாக்கப்பவர்களாக மற்றுமொரு தரப்பினராகவுமே பிரிக்கப்படுதல் வேண்டும்.

அதனைவிடுத்து தனிபர் என்றோஇ இன அடிப்படையிலோஇ கட்சி அடிப்படையிலோ பிளவுப்பத்தக்கூடாது என கூறினார்.

இந்தநிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 65 இலட்சம் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமது ஜனாதிபதி வேட்பாளரான கோட்;டாபய ராஜபக்ஷஇ கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஏனைய பங்காளி கட்சிகள் ஊடாக குறி;த்த இலக்கை அடைவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.