சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்ப்பட்ட 12 பேர் கைது..

Sunday, 18 August 2019 - 13:23

%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+12+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக சிலாபம் - தொடுவாய் கடற்பகுதிக்கு சென்ற 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவல்களுக்கு அமைய, நேற்றிரவு இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

எவ்வாறிருப்பினும், மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் செல்வதற்காக தாங்கள் அங்கு சென்றதாக விசாரணையின்போது அவர்கள் தெரிவித்துள்ளனர்.

10 சந்தேகத்துக்குரியவர்கள் மட்டக்களப்பு பாசிக்குடாவை சேர்ந்தவர்கள் என்றும், ஏனைய இருவரும் தொடுவாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் சிலாபம் நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.