முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் புதிய ஆய்வு மைய கட்டிடம் திறப்பு

Wednesday, 21 August 2019 - 16:52

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் புதிய ஆய்வு மைய கட்டிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்றைய தினம் பொரளை - கோட்டா வீதி - ரோட்னி வீதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இது சுகாதார அமைச்சு, பல்கலைக்கழகம், இராணுவம் மற்றும் தனியார் துறைகளில் சேவை புரியும் மருத்துவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும் இந்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒரே முறையான நிறுவனமாகும்.

நிறுவனத்தின் வசதிகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் 2.5 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதோடு, இந்த கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக 1.6 பில்லியன் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.