மகிழ்ச்சிகர செய்தி - இடைக்கால கொடுப்பனவு

Wednesday, 21 August 2019 - 20:11

%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+-++%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81
ஊவா மாகாணத்தில் உள்ள 837 கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கான மாதாந்த வேதனத்துடன், 2500 ரூபாய் இடைக்கால கொடுப்பனவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவுறுத்தலை, கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரால், பொது நிர்வாக சுற்றறிக்கையின் பிரகாரம், கூட்டுறவு தொழில் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்தில் உள்ள கூட்டுறவு சங்க பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு, அவர்களுக்கான இடைக்கால கொடுப்பனவை வழங்குமாறு, விடயத்துக்கு பொறுப்பான மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இதன்அடிப்படையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த இடைக்கால கொடுப்பனவை வழங்கும் வகையிலும், கடந்த ஜுலை மாதம் 1ம் திகதி முதல் வழங்கப்படுகின்ற வேதனத்துடன் இந்த கொடுப்பனவு இணைக்கப்படும் என்றும் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரின் கடிதம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கொடுப்பனவானது ஊவா மாகாணத்தில் உள்ள 837 கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கும் ஓய்வுகாலம் வரையில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.