கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்..

Friday, 23 August 2019 - 15:42

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D..
ஹம்பாந்தொட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக இருக்கும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் புத்தளம் முதல் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.