மேலும் சில நாட்கள் தாமதம்..

Monday, 26 August 2019 - 7:32

%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் புதிய கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்படும் செயற்பாடு மேலும் சில நாட்கள் தாமதமாகும் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் சம்மேளனத்தின் போது வேட்பாளர் மற்றும் புதிய கூட்டணி உருவாக்கல் என்பனவற்றை மேற்கொள்ள தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வார இறுதிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர் முன்னதாக கோரியிருந்தனர்.

எனினும் இதுவரை அதற்கான எந்த பிரயத்தனங்களும் மேற்கொள்ளப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.