இந்தியன்-2 படத்தின் வில்லன் இவரா ?ஆச்சர்யத்தில் திரையுலகம்..

Friday, 30 August 2019 - 15:45

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE+%3F%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D..
ஷங்கர் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான மெகா ஹிட் திரைப்படம் இந்தியன் ஆகும். குறித்த திரைப்படத்தின் 2 ஆம் பாகத்தை எடுக்கும் நடவடிக்கைகள் கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் கட்ட படப்பிடிப்புக்கள் ஆரம்பிக்கப்பட்ட சிறிது காலத்தின் பின்னரே இடை நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் , படத்தின் படப்பிடிப்புக்களை மீள ஆரம்பித்துள்ள நிலையில் பல நடிகர்கள் படத்தில் நடிக்க ஒப்புதல் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஜல் அகர்வால்,சித்தார்த்,பிரியா பவானி சங்கர்,ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் படத்தில் ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த நிலையில் தற்பொழுது கமலுக்கு வில்லனாக பாபி சிம்ஹா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க விவேக் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் வெளியான அந்நியன்,பாய்ஸ்,சிவாஜி ஆகிய திரைப்படங்களில் விவேக் நடித்திருந்தமை மேற்க்கோள்காட்டக்கூடியது.