Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Wednesday, 11 September 2019 - 7:59
இன்றும் பணிப்புறக்கணிப்பு
1,607

Views
வேதன பிரச்சினையை முன்னிறுத்தி ஸ்ரீ லங்கா நிர்வாக சேவை சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பு இன்றும் முன்னெடுக்கப்படுகிறது.
 
அந்த சங்கத்தின் செயலாளர் ரோஹன டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
 
தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வை பெற்று கொடுப்பதற்காக உரிய அதிகாரிகள் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்றைய தினம் குடிவரவு குடியல்கவு திணைக்களம், ஆட்பதிவு மற்றும் மோட்டார் வாகன பதிவு திணைக்களம் என்பனவற்றின் செயற்பாடுகளுக்க பாதிப்பு ஏற்பட்டது.
 
இதன்காரணமாக அந்த திணைக்களங்களில் சேவைகளை நாடு பிரவேசித்த மக்கள கடும் அசௌகரியங்களுக்கு உள்ளானதாக எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இதேவேளை, 2016 பாதீட்டு ஆவணத்திற்கமைய ஏற்பட்டுள்ள வேதன பிரச்சினையை மையப்படுத்தி பல்கலைகழக கல்விசாரா மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டம் இன்றும் தொடர்கிறது.
 
இந்த தொழிற்சங்க போராட்டம் நாட்டிலுள்ள சகல பல்கலைகழகங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைகழக தொழிற்சங்க ஒன்றியத்தின் ஊடக செயலாளர் சமன் காரியவசம் தெரிவித்துள்ளார்.
 
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top