Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Wednesday, 11 September 2019 - 13:07
பல்வேறு அரச நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு
1,616

Views
இலங்கை நிர்வாக சேவை சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக பல்வேறு அரச நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு இன்றும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வேதன பிரச்சினையை முன்வைத்து நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று நிறைவுபெறவுள்ளது.

இந்த நிலையில், போராட்டம் காரணமாக, குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம், ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம், வாகன போக்குவரத்து திணைக்களம் உட்பட அனைத்து மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர் காரியாலங்களின் நிர்வாகப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தங்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால், போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதாக இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் செயலாளர் ரோஹன டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் எமது செய்திச் சேவை பொதுநிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம் எமது செய்திச் சேவை வினவியது.

இதன்போது பதிலளித்த அவர், அடுத்த வருடம் ஜுலை மாதத்தின்போது, நிர்வாக சேவை அதிகாரி ஒருவரின் அடிப்படை வேதனம் 65 ஆயிரம் ரூபா வரையில் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top