Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D..
Wednesday, 11 September 2019 - 13:29
பிரதமர் ஸ்கொட் மொரிசனிடம் கோரவுள்ள விடயம்..
51

Views
இலங்கைக்கு நாடுகடத்தப்படும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள தமிழ்க் குடும்பத்தை அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதிக்குமாறு பிரதமர் ஸ்கொட் மொரிசனிடம் பிலைலோ குடியிறுப்பாளர்கள் நேரில் கோரவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான கையொப்பங்கள் அடங்கிய கோரிக்கை கடிதத்தை கையளிப்பதற்காக இன்று அவர்கள் கன்பெராவில் உள்ள நாடாளுமன்றத்திற்கு செல்கின்றனர் என்று அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
 
நடேசலிங்கம் - பிரியா மற்றும் அவர்களின் இரண்டு மற்றும் நான்கு வயது பெண் பிள்ளைகளான தருணிகா மற்றும் கோபிகா ஆகியோரின் நாடுகடத்தல் எதிர்வரும் 15ஆம் திகதிவரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, அவர்கள் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த நிலையில், கிறிஸ்மஸ் தீவிலிருந்து அவர்களை, குயின்ஸ்லாந்தில் தங்குவதற்கு அனுமதிக்குமாறு பிரதமர் ஸ்கொட் மொரிசனிடம் பிலைலோ குடியிறுப்பாளர்கள் கோரவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், பிரதமர் ஸ்கொட் மொரிசனுடன் நேரடி சந்திப்பை அவர்கள் கோருகின்றபோதிலும், குறுகிய கால அறிவித்தலுக்குள் அவ்வாறானதொரு சந்திப்புக்கான சாத்தியப்பாடு இல்லை என்றும் பிலைலோ குடியிறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top