Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88...
Wednesday, 11 September 2019 - 13:42
பல பகுதிகளிலும் மெதுவாகவே நடவடிக்கை...
55

Views
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் நடவடிக்கைகள் பல பகுதிகளிலும் மெதுவாகவே உள்ளதாக இலங்கை தொடர்பான இணை அனுசரணை நாடுகள் தெரிவித்துள்ளன.
 
சில முக்கியமான உள்நாட்டு நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளபோதும்,  அதிகாரத்துவ தடைகள் இந்தத் தாமதத்திற்கு காரணமாக இருப்பதாகவும் இணை அனுசரணை நாடுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
 
ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடரில், இணை அனுசரணை நாடுகளின் சார்பாக, பிரித்தானிய பிரதிநிதி ரீட்டா ப்ரென்ச்  நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
 
கனடா, ஜேர்மனி, வடக்கு மசிடோனியா, மொன்ரெனிக்ரோ மற்றும் பிரித்தானியா சார்பாக மனித உரிமைகள் பேரவையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
 
மனித உரிமைகள் பேரவையின் இணைத் தீர்மானம் 30ஃ1 இன் மூலம், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்காக பரந்த சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதான உரிமையை இலங்கை எடுத்துக் கொண்டு நான்கு ஆண்டுகளாகியுள்ளன.
 
அண்மையில், ஆறு மாதங்களுக்கு முன்னர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஃ1 தீர்மானத்தின் மூலம், இலங்கை அந்த வாக்குறுதிகளை மீள் உறுதி செய்தது.
 
இதற்கமைய, இலங்கை அரசாங்கம் தனது மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகள்,  தேசிய நல்லிணக்கம், உறுதித்தன்மை மற்றும் செழிப்புக்கு இன்றியமையாதது என்று இணை அனுசரணை குழு தெரிவித்துள்ளது.
 
இந்த நடவடிக்கைகள் வெற்றி பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை மக்களிடமிருந்து தொடர்ச்சியான ஆதரவு முக்கியமானதாக இருக்கும் என இணை அனுசரனை நாடுகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதற்கான பாதையில் தொடர்ந்தும், இந்த சபையும் சர்வதேச சமூகமும் இலங்கைக்கு தேவையான கவனத்தையும் ஆதரவையும் தொடர்ந்து வழங்குவது மிக முக்கியம் என்று பிரித்தானியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,612 Views
HiruNews
HiruNews
HiruNews
52,400 Views
HiruNews
HiruNews
HiruNews
20,243 Views
HiruNews
HiruNews
HiruNews
45,008 Views
HiruNews
HiruNews
HiruNews
230 Views
HiruNews
HiruNews
HiruNews
101,658 Views
Top