Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D...
Wednesday, 11 September 2019 - 14:04
கோட்டாபயவின் மனுவை நிராகாித்த உயா் நீதிமன்றம்...
7,404

Views
நிரந்தர நீதாய மேல்நீதிமன்றில் விசாரணைக்கு உள்ளாகும், மெதமுலனை டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாயப ராஜபக்ஷவினால் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்றைய தினம் உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சிசிர டி ஆப்று, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரீ.பீ.தெஹிதெனிய முதலான உயர்நீதிமன்ற நீதியசர்களின் பெரும்பான்மையுடன் குறித்த மனு நிகாகரிக்கப்பட்டுள்ளது.

நிரந்தர நீதாய மேல்நீதிமன்றில் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் குறித்த வழக்கில், குற்றச்சாட்டுக்கள் சேகரிக்கப்படுகின்றமைக்கு எதிராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால், உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்றைய தினம் குறித்த மனு மீதான விசாரiணியின்போது, உயர்நீதிமன்றத் தவிசாளரான நீதியரசர் சிசிர டி ஆப்று, குறித்த மனுவை விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அனுமதியை வழங்கும் அளவுக்கு நியாயமான சட்டரீதியான அடிப்படை இல்லை என தெரிவித்துள்ளார்.

மெதமுலனை - டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியக நிர்மாணப் பணிகளின்போது 33.9 மில்லியன் ரூபாவை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கை, ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி முதல் நாளாந்தாம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நிரந்தர நீதாய மேல்நீதிமன்றம் அண்மையில் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
Top