Hirunews Logo
+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81..
Wednesday, 11 September 2019 - 19:53
கோதுமை மாவின் விலை ஒருபோதும் குறைக்கப்படாது..
553

Views
அதிகரிப்பட்ட கோதுமை மாவின் விலையை ஒருபோதும் குறைப்பதில்லை என ப்றீமா நிறுவனம் அதன் விற்பனை முகவர்களுக்கு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அதிக விலையில் கோதுமை மாவினை விற்பனை செய்த 200 இற்கும் அதிகமான வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 5 ரூபா 50 சதத்தினால் அதிகரிக்க ப்றீமா மற்றும் செறண்டிப் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்தன.

கோதுமை மா கிலோ ஒன்றுக்கான அதிகபட்ச சில்லறை விலை 87 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த நிறுவனங்கள் விலை அதிகரிப்பை மேற்கொண்டன.

இந்த நிலையில், கோதுமை மாவின் விலையை குறைப்பதற்கு நேற்று இடம்பெற்ற வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான குழுவின் கூட்டத்தில் அந்த நிறுவனங்கள் இணங்கியதாக விவசாயத்துறை அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்திருந்தார்.

எவ்வாறிருப்பினும், அதிகரிப்பட்ட விலைக்கே கோதுமை மாவினை விற்பனை செய்யுமாறு குறித்த நிறுவனங்கள் தங்களின் விநியோக முகவர்களுக்கு தெரிவித்துள்ளது.

ரூபாவின் மதிப்பிறக்கம் மற்றும் இறக்குமதி செய்யப்படும் கோதுமைக்கான வரியை அதிகரித்தமை என்பனவற்றைக் கருத்திற்கொண்டு விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளதாக, கோதுமை மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், வரியை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டால், கோதுமை மாவின் விலையை அதிகரிக்கவேண்டிய அவசியம் இல்லை என்று ப்றீமா நிறுவன பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவின் விலையை அதிகரிக்க வேண்டுமாயின், அதற்காக நுகர்வோர் அதிகாரசபையின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த நிலையில், குறித்த நிபந்தனையை மீறி விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால், குறித்த நிறுவனங்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக நுகர்வோர் அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவின் விலை அதிகரிப்புடன், 400 கிராம் நிறைகொண்ட பாண் ஒரு இறாத்திலின் விலையை 2 ரூபாவினால் அதிகரிக்க வெதுப்பக உரிமையாளர் கடந்த தினம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், அதில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என்று வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,612 Views
HiruNews
HiruNews
HiruNews
52,400 Views
HiruNews
HiruNews
HiruNews
20,243 Views
HiruNews
HiruNews
HiruNews
45,008 Views
HiruNews
HiruNews
HiruNews
230 Views
HiruNews
HiruNews
HiruNews
101,658 Views
Top