Hirunews Logo
%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D..
Wednesday, 11 September 2019 - 20:57
ஜனாதிபதி ஆணைக்குழுவில் இரண்டு மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய கல்வி அமைச்சர்..
47

Views
2015 முதல் 2018 வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சுமார் 2 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கல்வி அமைச்சரின் புகைப்படத்தை பாடசாலை பாடப்புத்தகங்களில் அச்சிடுதல் மற்றும் அது குறித்து சாட்சியமளித்த அமைச்சின் பணிப்பாளர் ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டமை என்பன தொடர்பிலேயே அகிலவிராஜ் காரியவசத்திடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு மீள அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் நாளைய தினம் முன்னிலையாக இயலாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறியப்படுத்தியுள்ளார்.

மன்னாரில் முன்னதாக திட்டமிடப்பட்ட சில நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக பிரதமர், நாளைய தினம் அங்கு செல்லவுள்ளதன் காரணமாக, நாளைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாக இயலாது என பிரதமரின் செயலாளரினால் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இன்று அறிவிக்கப்பட்டதாக அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 16 ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பிரதமருக்கு மீள் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
379 Views
HiruNews
HiruNews
HiruNews
78,707 Views
HiruNews
HiruNews
HiruNews
26,231 Views
HiruNews
HiruNews
HiruNews
55,457 Views
HiruNews
HiruNews
HiruNews
10 Views
HiruNews
HiruNews
HiruNews
122,431 Views
Top