வாநூர்தி தளங்களின் பாதுகாப்பினை மேம்படுத்த ஜப்பான் நிதி உதவி

Friday, 13 September 2019 - 20:11

%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF
பயங்கரவாதிகளின் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து வாநூர்தி தளங்களின் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்காக ஜப்பான் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது.

வாநூர்தி தளங்களில் பாதுகாப்பு தொடர்பான நவீன உபகரணங்கள் பொருத்தப்படுவது உட்பட பல பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 1.6 பில்லியன் ரூபா ஜப்பானிய அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ளன.

ஏப்ரல் 21 தாக்குதலின்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதனை அடுத்து, சுற்றுலாத் துறை பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், சுற்றுலாத்துறையினை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவருவதற்கு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பினை பேணுவது மிகவும் அவசியம் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பொருளாதார பின்னடைவு ஏற்பட்ட நிலையில், அதனை மீண்டும் கட்டி எழுப்புவதற்கு ஜப்பான் உதவ முன்வந்துள்ளது.

பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட உடனடி நடவடிக்கைகள் காரணமாக பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தற்போது, இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த வருடம் செப்டம்பர் மாத வருகைக்கு இணையாக மேம்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.