வட மாகாண மாணவர்களுக்கு ஆளுநர் விடுக்கும் முக்கிய செய்தி..!

Sunday, 15 September 2019 - 7:18

%E0%AE%B5%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF..%21
வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் நாளைய தினம் வழமை போல இயங்கும் என வடக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

எழுக தமிழ் பேரணியை முன்னிட்டு வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் நாயை தினம் இயங்காது என தகவல் வெளியிடப்பட்டுள்ள தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள எழுக தமிழ் பேரணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

60 இற்கும் மேற்பட்ட பொது அமைப்புகள் எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அதன் ஏற்பாட்டாளர்கள் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.