ஐந்து பேரின் கட்சி உறுப்புரிமையை நீக்க சுதந்திர கட்சி தீர்மானம்- தயாசிறி ஜயசேகர

Sunday, 15 September 2019 - 7:27

%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலிருந்து விலகி வேறு கட்சிக்கு ஆதரவு வழங்கிய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவரது கட்சி உறுப்புரிமையை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்காலத்தில் அவர்களுக்கு குற்றச்சாட்டுப் பத்திரங்கள் அனுப்பப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசறி ஜயசேகர தெரிவித்தார்.

கட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கையை மேற்கொள்ளும் சகலருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திசாநாயக்க, டிலான் பெரேரா, ஏ.எச்.எம் பௌசி, விஜித் விஜயமுனி சொய்ஷா மற்றும் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோரது கட்சி உறுப்புரிமையே இவ்வாறு நீக்கப்பட்டது.

இதேவேளை, கட்சியின் உறுப்புரிமை இரத்து செய்ய சடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌசி, குறித்த கடிதம் கிடைக்கப்பெற்றதன் பின்னர் அதற்கான தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக குறிப்பிட்டார்.