கேரள கஞ்சாவுடன் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைந்த வாகனம்..!

Monday, 16 September 2019 - 13:14

%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..%21
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கேரள கஞ்சாவுடன் பயணித்த வாகனம் ஒன்றின் உரிமையாளரை, எதிர்வரும் 24ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க, பத்தேகம பதில் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்றைய தினம் குறித்த வாகனம் காவற்துறையினரின் சமிக்ஞையை மீறி பயணித்திருந்தது.

பின்னர் பத்தேகம, பகுதியில் சந்தேகத்துக்கு இடமான 3 பொதிகளை வீசிவிட்டு வாகனம் ஒன்று தப்பிச் செல்வதாக பிரதேசவாசி ஒருவரால் காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

இதன்படி குறித்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, கேரள கஞ்சாப்பொதிகள் மீட்கப்பட்டிருந்தன.

இந்தபொதிகளை எறிந்துச் சென்ற வாகனத்தின் பதிவு இலக்கத்தை கொண்டு நடத்திய விசாரணைகளில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காவற்துறையினரின் சமிக்ஞையை மீறி பயணித்த வாகனமே இதுவென்று கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.