Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87..%21
Monday, 30 September 2019 - 8:40
பிக்பாஸ் வரலாற்றில் விம்மி அழுத பார்வையாளர்கள்..! காரணம் தர்ஷன் என்ற ஒருவனே..!
3,151

Views
முதல் சீசனில் நடிகர் ஆரவ்வும், 2-வது சீசனில் ரித்விகாவும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஒளிபரப்பாகும் 3-வது சீசனில் டைட்டிலை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இறுதியாக கவின் பிக்பாஸ் கொடுத்த ரூ.5 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு வெளியேறினார்.

தற்போது தர்ஷன், ஷெரின், சாண்டி, லாஸ்லியா, முகென் ஆகிய 5 பேர் போட்டியாளர்களாக இருந்தனர்.

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று தர்ஷன் வெளியேற்றப்பட்டதாக கமல்ஹாசன் அறிவித்தவுடன் சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

Image result for தர்ஷன்

பிக்பாஸ் வெற்றியாளராக தெரிவாகுவதற்கு தகுதியானவர்களில் தர்ஷனும் ஒருவர் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென அவர் வெளியேறுவது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது

தர்ஷன் இதனை எளிதாக எடுத்துக் கொண்டாலும் பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்றவர்கள் இதனை நம்ப முடியாமல் தவித்தனர். இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய தர்ஷன் நேற்று கமல்ஹாசனிடம் பேசுவதற்காக அரங்கிற்கு வந்தார்.

அப்போது பலத்த கைதட்டல் உடன் தர்ஷனை வரவேற்ற பார்வையாளர்கள் ’தர்ஷன் தர்ஷன்’ என்று சத்தமிட்டனர். அதுமட்டுமின்றி ஒருசில பெண்கள் தர்ஷனின் வெளியேற்றத்தை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பார்த்ததும் தனக்கு இவ்வளவு அன்பு வெளியில் இருக்கின்றதா என்பதை பார்த்து தர்ஷன் நெகிழ்ந்து விட்டார்

பிக்பாஸ் வரலாற்றில் ஒரு போட்டியாளர் வெளியேறும்போது இந்த அளவிற்கு வரவேற்பு கொடுத்து கோஷமிட்டு கண்ணீர் விட்டு அழுவது என்பது இல்லாத ஒன்றாக கருதப்படுகிறது. இவ்வளவு வரவேற்பு கிடைத்துள்ள ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது என்பது பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு கரும்புள்ளியாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE
விலை உயர்ந்த மிதி வண்டிகள்..
Wednesday, 13 November 2019 - 9:23
உலகின் அழகிய மற்றும் விலை உயர்ந்த 10 மிதி வண்டிகளின் புகைப்படங்கள்          Read More
News Image
Hiru News Programme Segments
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
HiruNews
1,390 Views
HiruNews
HiruNews
HiruNews
60,482 Views
HiruNews
HiruNews
HiruNews
22,861 Views
HiruNews
HiruNews
HiruNews
48,726 Views
HiruNews
HiruNews
HiruNews
444 Views
HiruNews
HiruNews
HiruNews
110,240 Views
Top