Khao Yai National Park சரணாலயத்தில் மேலும் 5 யானைகள் பலி.....!

Thursday, 10 October 2019 - 13:36

Khao+Yai+National+Park+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+5+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF.....%21
தாய்லாந்தின் காவ் யாய் Khao Yai National Park தேசிய வனவிலங்கு சரணாலத்தில் மேலும் 5 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

ஹே நரோக் ர்யநற யேசழம என்ற நீர்வீழ்ச்சியிலிருந்து கீழே வீழ்ந்து குறித்த காட்டு யானைகள் உயிரிழந்ததாக புகைப்பட ஆதாராங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் அந்த நீர்வீழ்ச்சியில் 3 வயது குட்டி யானை உட்பட 6 காட்டு யானைகள் பலியாகியிருந்தன.

இந்த நிலையில், தற்போது 11 யானைகள் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

200 மீற்றர் உயரான குறித்த நீர்வீழ்ச்சியிலிருந்து தவறி வீழ்ந்ததில் 2 காட்டு யானைகள் மாத்திரமே இதுவரை உயிரித்தப்பியுள்ளதாக தாய்லாந்து சரணாலய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.