முக்கிய சந்திப்பு இன்று ..

Monday, 14 October 2019 - 13:23

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81++%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+..
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளை பொது நிலைப்பாடொன்றுக்கு கொண்டுவரும் நோக்கில் வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு இன்று பிற்பகல் மீண்டும் இடம்பெறவுள்ளது.

குறித்த சந்திப்பில் யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப்பிரதிநிதிகளுடன், இலங்கை தமிழரசுக் கட்சி, புளொட், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஈ.பீ.ஆர்.எல்.எவ் மற்றும் ரெலோ உள்ளிட்ட 6 கட்சிகள் பங்கேற்றிருந்தன.

இது தொடர்பில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது தமிழ் தேசிய கட்சிகள் பல்வேறு விடயங்களை முன்வைத்திருந்த நிலையில் அவற்றில் சில விடயங்களில் பங்கேற்றிருந்த கட்சிகளுக்கு இடையில் இணக்கம் ஏற்பட்டிருந்தது.

எனினும் புதிய அரசிலயமைப்பு ஒன்றை உருவாக்குவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையை ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்பது தொடர்பில் கட்சிகளுக்கிடையே இணக்கப்பாடு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் இன்றைய சந்திப்பின் போது அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனை தெரிவித்தார்.