இலங்கை வீரர்களின் பாதுகாப்பு குறித்து ஏமாற்றம்- சம்மி சில்வா

Tuesday, 15 October 2019 - 8:09

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE
பாகிஸ்தானில் வீரர்களிற்கு வழங்கப்பட்ட கடும் பாதுகாப்பு குறித்து ஏமாற்றம் வெளியிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சம்மி சில்வா இவ்வாறான பாதுகாப்பிற்கு மத்தியில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியுமா என சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இலங்கை அணியை அனுப்பியமைக்காக பாகிஸ்தான் நன்றி வெளியிட்டுள்ளது. ஆனால் ஐந்து நாட்களும் வீரர்கள் ஹோட்டலிற்குள் இருக்கவேண்டும் என்பதால் டெஸ்ட்போட்டியில் விளையாடுவது சாத்தியமா என நாங்கள் ஆராயவேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு மூன்று நாட்கள் ஹோட்டலிற்குள்ளேயே இருந்ததே எனக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிற்கு இது எந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து நாங்கள் சிந்திக்கவேண்டியுள்ளது என சம்மி சில்வா தெரிவித்துள்ளார்.