தேர்தலில் வாக்களிக்கும் நிலைமை 85 வீதம்

Wednesday, 16 October 2019 - 13:11

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88+85+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் நிலைமையானது நூற்றுக்கு 85 வீதம் என்ற அளவில் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் வாழ்பவர்களில் தேர்தலின்போது வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் நிலைமை அவதானிக்ககூடும்.

அதாவது மருத்துவமனை மற்றும் வீடுகளிலிருந்து வெளியே செல்ல முடியாதவர்கள், சிறைச்சாலைகள் உள்ளவர்கள் ஆகியோரைத் தவிர்ந்த ஏனையவர்கள் வாக்களிப்பதற்காக செல்வதில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் கூறியுள்ளார்.

இதேநேரம், வெளிநாடுகளில் உள்ள வாக்காளர்கள், நாட்டுக்கு திரும்புவதற்கான விமான பயணச் சீட்டை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 7 லட்சத்து 17 ஆயிரத்து 918 பேர் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்துள்ளனர்.

அஞ்சல் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பித்தவர்களில், 58 ஆயிரத்து 404 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.