தவறை ஏற்றுக்கொள்வதாக அறிவிப்பு...

Wednesday, 16 October 2019 - 13:14

+%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...
கொழும்பு மாநகர சபையின் முதல்வர் ரோசி சேனாநாயக்க அருவக்காடு குப்பை மேடு திட்டம் தொடர்பில் விமர்சனம் செய்தமைக்கான தவறை ஏற்றுக்கொள்வதாக மாநாகர சபை அறிவித்துள்ளதாக பெருநகர மறறும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று முற்பகல் கடிதம் மூலம் மாநகர சபை குறித்த விடயத்தை தமக்கு அறிவித்ததாக அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இன்று முற்பகல் இடைநிறுத்தப்பட்டிருந்த குப்பைகளை கொண்டுசெல்லும் பணிகள் இன்று பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாநகர சபையின் முதல்வர் ரோசி சேனாநாயக்க அருவக்காடு செயற்திட்டத்தை விமர்சித்ததன் காரணமாக இன்று முதல் அந்த குப்பை மேட்டிற்கு குப்பை கொட்டப்படுவதை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் மன்னிப்பு கோரியதை அடுத்து, அருவக்காட்டுக்கு குப்பைகளை கொண்டுசெல்லும் பணிகள் மீள ஆரம்பிக்கப்டுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பிலிருந்து நாளொன்றுக்கு 400 மெற்றிக் தொன் அளவான குப்பை 28 பாரவூர்திகளில் அருவாக்காடு குப்பை மேட்டுக்கு கொண்டுசெல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.