காகித அட்டை வாக்குப்பெட்டி

Tuesday, 22 October 2019 - 7:32

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இன்று நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பானது இன்று முற்பகல் 10 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர், இரண்டு தரப்புக்கும் இடையில் நடைபெறும் மூன்றாவது சந்திப்பு இதுவாகும்.

குறித்த சந்திப்பில் தேர்தல் வன்முறைகளை தடுத்தல் , தேர்தல் சட்டவிதிகளை பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தேர்தல்கள்  ஆணைக்குழுவினால் தெளிவுப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இன்றைய சந்திப்பின் போது, தேர்தல்கள் கண்காணிப்பு குழுக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகுpறது.

அவர்களுடன், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை இந்த முறை ஜனாதிபதி தேர்தலின் போது காகித அட்டையினால் தயாரிக்கப்பட்ட வாக்குப்பெட்டிகளை பயன்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதற்கான கேள்வி மனுக்கோரல்கள் நிறுவனங்களிடம் இருந்து எதிர்ப்பார்த்துள்ளதாக ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் களம் இறங்கியிருக்கும் நிலையில் வாக்கு சீட்டு ஒன்று 26 அங்குலம் அளவு நீளம் கொண்டதாக உள்ளது.

இதனால் வாக்குபெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.