முன்னிலையாக உள்ள பிரதமர்

Wednesday, 23 October 2019 - 7:51

+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D
2015 முதல் 2018 வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று முன்னிலையாக உள்ளார்.

மத்தள விமான நிலையத்தில் நெல்லைக் களஞ்சியப்படுத்தியமை தொடர்பில் ஆணைக்குழவினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, பிரதமர் முன்னிலையாக உள்ளார்.

இதற்கமைய, இன்று முற்பகல் 10.30 அளவில் ஆணைக்குழவில் முன்னிலையாகுமாறு பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 18 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பிரதமருக்கு அறிவிக்கப்பட்டிருந்தபோதும், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தமையினால், ஆணைக்குழுவில் முன்னிலையாக இயலாது என பிரதமர் அறியப்படுத்தி இருந்தார்.

இதற்கமைய, இன்றைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாக சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு பிரதமர் கோரியிருந்ததற்கமைய, இன்றைய தினம் அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.